• Fri. Jan 31st, 2025

24×7 Live News

Apdin News

கொரோனா சீன ஆய்வகத்திலிருந்து பரவியதற்கான வாய்ப்புகள் அதிகம் – அமெரிக்கா கூறுவது என்ன?

Byadmin

Jan 27, 2025


கொரோனா வைரஸ், சிஐஏ, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிஐஏவின் புதிய இயக்குநர் ஜான் ரட்கிளிஃப்

  • எழுதியவர், ஹோலி ஹோண்டெரிச்
  • பதவி, வாஷிங்டனிலிருந்து

அமெரிக்காவின் உளவு முகமையான சிஐஏ சனிக்கிழமை வெளியிட்ட பகுப்பாய்வு முடிவின்படி, கொரோனா பெருந்தொற்று விலங்குகளிலிருந்து அல்லாமல் சீன ஆய்வகத்திலிருந்து ஏற்பட்டிருக்கதான் “வாய்ப்புகள் அதிகம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதன் முடிவுகள் குறித்து தங்களுக்கு “அதிக நம்பிக்கை” இல்லை என உளவு முகமை தெரிவித்துள்ளது.

“ஏற்கனவே உள்ள தரவுகளின்படி, கொரோனா பெருந்தொற்றுக்கு இயற்கையான காரணத்தைவிட ‘ஆய்வு ரீதியாக உருவாகியிருப்பதற்கான’ சாத்தியக்கூறுகள்தான் அதிகம்” என, சிஐஏ செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

டொனால்ட் டிரம்பால் நியமிக்கப்பட்டு, கடந்த வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட சிஐஏவின் புதிய இயக்குநர் ஜான் ரட்கிளிஃப் எடுத்த முதல் முடிவு, இந்த மதிப்பாய்வை வெளியிடுவதுதான்.



By admin