• Fri. May 2nd, 2025

24×7 Live News

Apdin News

கொல்கத்தா தீ விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் மரணம் – பேரக்குழந்தைகளுடன் தாத்தா பலி

Byadmin

May 2, 2025


கொல்கத்தா தீ விபத்து

பட மூலாதாரம், Spl Arrangement

படக்குறிப்பு, முத்து கிருஷ்ணனும், அவருடைய மகள் வழிப் பேத்தி தியா மற்றும் பேரன் ரிதன்

கொல்கத்தாவில் ஒரு ஹோட்டலில் நடந்த தீவிபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேருடைய உடல்களும் கரூர் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

தீயணைப்பு வாகனங்கள் மிகவும் தாமதமாக வந்ததால் அனைவரும் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக இறந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் உள்ள ரிதுராஜ் என்ற ஆறு மாடி ஹோட்டலில் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று இரவு 8 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த முத்து கிருஷ்ணனும், அவருடைய மகள் வழிப்பேத்தி தியா (வயது 10) மற்றும் பேரன் ரிதன் (4) ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.

By admin