• Fri. Mar 6th, 2026

24×7 Live News

Apdin News

கொழுப்பு கல்லீரல் நோய் பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்குவது ஏன்? அறிகுறி, சிகிச்சை மற்றும் தவிர்க்கும் வழிகள்

Byadmin

Mar 6, 2026


மது, கல்லீரல் நோய், மருத்துவம், உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

உலகம் முழுவதும் ஆயிரத்தில் 47 பேருக்கு ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (non alcoholic fatty liver – NAFLD) பாதிப்பு இருப்பதாக பயோடெக்னாலஜி தகவல்களுக்கான தேசிய மையம் (National Center for Biotechnology Information – NCBI) கூறுகிறது.இது பெண்களை விட ஆண்களிடையே அதிகமாக காணப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கப்பட்ட வளர்சிதை மாற்ற செயலிழப்பு கல்லீரல் நோய் (MASLD) உடல் பருமன், வகை 2 நீரிழிவு மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடைய, கல்லீரலில் தேவையற்ற கொழுப்பு சேரும் நிலை. இது கல்லீரல் அழற்சி (MASH), வடுக்கள், மற்றும் சில நேரங்களில் கல்லீரல் புற்றுநோய்க்கும் கூட வழிவகுக்கும் ஒரு தீவிரமான நிலையாக உள்ளது. இது கல்லீரல் புற்றுநோய் அல்லது கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கக் கூடும்.

மது அருந்தாதவர்களுக்கும் கூட வளர்சிதை மாற்ற செயலிழப்புடன் தொடர்புடைய இந்த கல்லீரல் நோய் வரலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இந்த நிலையில், கல்லீரல் நோய் நிபுணர் மருத்துவர் கார்த்திக் மதிவாணன் அதுகுறித்து விரிவாக விளக்குகிறார்.

கல்லீரல் என்ன செய்கிறது?

மது, கல்லீரல் நோய், மருத்துவம், உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் செய்கின்றன. இதயம் இரத்தத்தை பம்ப் செய்கிறது. நுரையீரல் ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது. ஆனால் கல்லீரல் மட்டும் 500-க்கும் மேற்பட்ட வேலைகளை செய்கிறது.

“வேறு எந்த உறுப்பும் இந்த அளவுக்கு சிக்கலான பணிகளை மேற்கொள்வதில்லை. கல்லீரல் இல்லாவிட்டால் உட்கொண்ட உணவு ஜீரணமாகாது; உயிர் வாழ்வதே சாத்தியமில்லை,” என்கிறார் மருத்துவர் கார்த்திக் மதிவாணன்.

By admin