• Mon. Dec 8th, 2025

24×7 Live News

Apdin News

கோகிலவதனி – தயாளன்: இலங்கை திட்வா புயலில் வீடு இழந்த குடும்பம் சந்திக்கும் துயர நிலை

Byadmin

Dec 8, 2025


இலங்கை, திட்வா புயல்

”என் கணவர் கொழும்புல கஷ்டப்பட்டு வேலை செய்து, சாப்பிடாமல் கூட இருந்து அதிகாலை 3 மணிக்கு எல்லாம் போயிட்டு தான் கஷ்டப்பட்டு இந்த வீட்டை பெரிய வீடாக கட்டி எங்களையும் சந்தோஷமாக வைத்திருந்தாரு. இப்போ வீடு வாசல் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றோம்.” என வீட்டை இழந்து தவிர்க்கும் கோகிலவதனி தெரிவிக்கின்றார்.

மாத்தளை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்மடுவ பகுதியில் வசித்து வருபவர் கோகிலவதனி. மூன்று பிள்ளைகளுக்கு தாயான கோகிலவதனியின் கணவர் தயாளன், கொழும்பில் கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.

திட்வா புயலின் தாக்கத்தினால் இலங்கையில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான பேரில் கோகிலவதனியும் ஒருவர் ஆவார்.

தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்தும், கடன்களை பெற்றும் தமது எதிர்காலத்தை எண்ணி கட்டிய வீடு திட்வா புயல் காரணமாக இன்று இல்லை என்கிறார் அவர்.

இலங்கை, திட்வா புயல்

உறவினர் வீட்டில் குழந்தைகள்

கடந்த 26-ஆம் தேதி பெய்த கடும் மழையின் போது இவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள மண்மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் கோகிலவதனியின் வீட்டின் ஒரு புறம் முற்றாக சேதமடைந்துள்ளது.

By admin