• Sat. Feb 28th, 2026

24×7 Live News

Apdin News

கோகில பாண்டியன்: பாலியல் புகாரில் 9 ஆண்டுக்கு பிறகு நிரபராதி என நிரூபித்த தேனி ஆசிரியர்

Byadmin

Feb 28, 2026


 பாலியல் குற்றச்சாட்டு, தேனி,  அரசுப் பள்ளி ஆசிரியர், கல்வி
படக்குறிப்பு, ஆசிரியர் கோகில பாண்டியன்

‘தவறான பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஓர் ஆசிரியர், மாணவர்களையும் சமூகத்தையும் எதிர்கொள்வது என்பது கற்பனை செய்ய முடியாத ஒன்று’ என, பிப்ரவரி 19-ஆம் தேதியன்று ஆண்டிப்பட்டி நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளது.

முன்விரோதம் காரணமாக தன் மீது சக ஆசிரியைகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியதாக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கில், இரு ஆசிரியைகள் உள்பட 5 கல்வி அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

தண்டனைக்கு ஆளான அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தேனியில் உள்ள ஓர் அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்த கோகில பாண்டியன் மீது 2016-ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

By admin