• Wed. May 7th, 2025

24×7 Live News

Apdin News

கோடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் உதவியாளரிடம் விசாரணை | Kodanadu case investigation in jayalalithaa assistant

Byadmin

May 7, 2025


கோவை: நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் நடந்த கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கு, கோவை சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பினர். அதன்படி, காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பூங்குன்றன் நேற்று ஆஜரானார். அவரிடம் எஸ்.பி. மற்றும் கூடுதல் எஸ்.பி. தலைமையிலான போலீஸார் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘கோடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் குறித்தும், பங்களா வளாகத்தில் எந்தெந்த பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இருந்தன என்பது குறித்தும் பூங்குன்றனிடம் விசாரிக்கப்பட்டது’’ என்றனர்.



By admin