• Sat. Aug 2nd, 2025

24×7 Live News

Apdin News

கோயில்களின் உண்டியல் காணிக்கை, வாடகை கட்டணம் எங்கே போகிறது? – இந்து முன்னணி மாநிலத் தலைவர் கேள்வி | Hindu Munnani state president questions where do temple offerings and rents go

Byadmin

Aug 1, 2025


சென்னை: கோ​யில்​களின் ஆண்டு வரு​மானம் ரூ.345 கோடி என அறநிலை​யத்​துறை தெரி​வித்​துள்ள நிலை​யில், உண்​டியல் காணிக்கை, கோயில்​களுக்கு சொந்​த​மான கட்​டிடங்​களின் வாடகை கட்​ட​ணம் எங்கே செல்​கிறது என்று இந்து முன்​னணி கேள்வி எழுப்பி உள்​ளது.

இது தொடர்​பாக, இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்வரா சி.சுப்​பிரமணி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கோயில் நிதி​யில் கட்​டிடங்​கள் கட்​டு​வது சம்​பந்​த​மான பொதுநல வழக்​கில், அறநிலை​யத் துறை சார்​பில் பதில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

அதில், தமிழகத்​தில் கோயில்​களின் ஆண்டு வரு​மானம் ரூ.345 கோடி என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கோயில் நிலத்​தில் ஏக்​கருக்கு ஒரு ரூபாய் என்ற அளவிலும்​கூட வரு​வாய் இல்​லை​யா? கட்​டிட வாடகை எவ்​வாறு நிர்​ண​யிக்​கபட்​டுள்​ளது? திருமண மண்டப வாடகை, கோயில் இடங்​களில் அரசு அலு​வல​கங்​கள் வாடகை எல்​லாம் எந்​தக் கணக்​கில் வரு​கிறது? கோயில் நகைகளை உருக்கி தங்க பிஸ்​கட்​டு​களாக டெபாசிட் செய்த வரு​மானம் எதில் சேர்க்​கப்​படு​கிறது? மதுரை, திரு​வண்​ணா​மலை, பழனி, திருச்​செந்​தூர் போன்ற பல கோயில்​களில் ஒவ்​வொரு மாத​மும் உண்​டியல் காணிக்கை பல கோடி வரு​கிறது.

அவை எங்​கே? அறநிலை​யத் துறை​யின் தேவையற்ற நிர்​வாகச் செல​வு​கள், ஊழல், முறை​கேடு​களால் கோயில் நிதி சுரண்டப்படுகிறது என்​ப​தால் கோயில் வரு​வாய் காணா​மல் போகிற​தா? இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா​வில், “நம்ம சாமி, நம்ம கோயில், நாமே பாது​காப்​போம்” என்ற அறை​கூவலை, பக்​தர்​களிடம் இந்து முன்​னணி கொண்டு சேர்க்க இருக்​கிறது. இதனால், கோயில் நிர்​வாகம் என்ற பெயரில் அரசி​யல் செய்​யும் அராஜகம் முடிவுக்கு வரும். இவ்​வாறு அறிக்​கை​யில்​ தெரிவிக்​கப்பட்​டுள்​ளது.



By admin