• Wed. Dec 25th, 2024

24×7 Live News

Apdin News

கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை நிரந்தரம் செய்ய கோரிக்கை | Request to make permanent those working in temples for more than 5 years

Byadmin

Dec 24, 2024


சென்னை: கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணியாற்றுவோரை நிரந்தரம் செய்ய வேண்டும் என திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியனின் சென்னை கோட்டத்துக்குட்பட்ட மதுரவாயல், விருகம்பாக்கம் கிளை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை, கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் மற்றும் வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் நாகமுத்து தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் அணிச் செயலாளர் செந்தமிழ் செல்வி கலந்து கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

சென்னை கோட்டத்தின் செயல் தலைவர் கீர்த்திவாசன், கவுரவ தலைவர் வேலாயுதம், தலைவர் தனசேகர், செயலாளர் இரா.ரமேஷ், கொள்கை பரப்பு செயலாளர் து.தனசேகர், கிளை பொருளாளர் ஜெய்கர் ஆகியோர் கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும் கிளை வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து கிளை நிர்வாகிகளிடையே கலந்தாலோசனை செய்தனர்.

குறிப்பாக, திருக்கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்து வரும் பணியாளர்களை 110 விதியின் கீழ் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் திருக்கோயில் செயல் அலுவலர் நிலை நான்கு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெறும் தேர்வில் 25 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை விரைவில் பிறப்பிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



By admin