• Sat. May 31st, 2025

24×7 Live News

Apdin News

கோல்டன் டோம்: அமெரிக்காவின் புதிய திட்டம் ரஷ்யா, சீன தாக்குதல்களை எதிர்கொள்ள உதவுமா?

Byadmin

May 26, 2025


அமெரிக்கா, கோல்டன் டோம், டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோல்டன் டோம் திட்டத்தை அறிவித்தார் டிரம்ப்

சமீபத்தில் அமெரிக்காவுக்கு கோல்டன் டோம் என்கிற பாதுகாப்பு கவசத்தை உருவாக்கப் போவதாக சமீபத்தில் டிரம்ப் அறிவித்திருந்தார்.

அமெரிக்காவுக்கு மேல் ஒரு சிறிய அணுகுண்டு வெடித்தால் கூட அது பேரழிவான முடிவுகளைக் கொண்ட ஒரு மின்காந்த துடிப்பை (electromagnetic pulse) உருவாக்கும். விமானங்கள் வானத்தில் இருந்து கீழே விழும். கையில் இருக்கும் மின்சாதனங்கள் தொடங்கி மருத்துவ உபகரணங்கள், நீரியல் அமைப்புகள் என அனைத்தும் பயனற்றதாகிப் போகும்.

அப்படி ஒன்று நிகழ்ந்தால் அமெரிக்கா 1,000 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் என்கிறார் வடக்கு கரோலினா மாகாணத்தின் மான்ட்ரீட் கல்லூரியில் உள்ள எழுத்தாளரும் ஆயுத ஆராய்ச்சியாளருமான வில்லியம் ஃபோர்ட்ஸ்சென்.

“நாம் 100 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல மாட்டோம். நாம் அனைத்தையும் இழந்து விடுவோம், அதனை எவ்வாறு மறுகட்டுமானம் செய்வது என நமக்குத் தெரியாது. இது நாம் 1,000 ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வதற்கு சமமாகும். நாம் அனைத்தையும் ஆரம்பத்தில் இருந்து தொடங்க நேரிடும்” என்றார் அவர்.

By admin