• Sat. Mar 7th, 2026

24×7 Live News

Apdin News

கோவையில் காண்டாமிருகம் ஒரு காலத்தில் வாழ்ந்ததா? தொல்லியல் ஆய்வில் புதிய தகவல்

Byadmin

Mar 7, 2026


காண்டாமிருகம்

பட மூலாதாரம், Anuwar Hazarika/NurPhoto via Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

கோவைக்கு அருகிலுள்ள மோளப்பாளையம் என்ற கிராமத்தில் நடந்து வரும் தொல்லியல் ஆய்வில் புதிய கற்காலத்தில் இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக கூறும் ஆய்வாளர்கள், இதில் கிடைத்துள்ள விலங்கு ஒன்றின் எலும்பு காண்டாமிருகத்தினுடையது என்று கூறுகின்றனர்.

இந்த கருத்தில் முரண்படும் காட்டுயிர் ஆய்வாளர்கள், சதுப்பு நிலங்களில் மட்டுமே வாழக்கூடிய காண்டாமிருகங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்ததில்லை என்றும், அதனால் அந்த எலும்பை மரபியல் சோதனைக்கு உட்படுத்தினால் மட்டுமே (DNA TEST) அது காண்டாமிருகத்தின் எலும்பு என்று உறுதியாக சொல்ல முடியுமென்று கூறுகின்றனர்.

ஆனால் உருவவியல் (MORPHOLOGY) அடிப்படையில் இந்தியாவின் தலைசிறந்த விலங்கியல் தொல்லியல் ஆய்வாளர்களால் அது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சியை தொகுத்துள்ள தொல்லியல் பேராசிரியர் செல்வகுமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

தொல்லியல் ஆய்வில் கிடைத்த எலும்பு

கோவை அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள மோளப்பாளையம் என்ற கிராமத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து தொல்லியல் ஆய்வுகள் நடந்து வருகின்றன.

அங்கே 3 மனித எலும்புக்கூடுகளும், அதிகமான அளவில் விலங்கு எலும்புகளும், கடல் கிளிஞ்சல், அம்மிக்கற்கள், அரவைக் கற்கள், கல் உருண்டைகள், தானிய விதைகள், கற்கோடாரிகள், புதியகற்காலப் பானைகள், கடற்சங்கில் செய்யப்பட்ட மணிகள், சேமிப்புக் குழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்கிறது, மோளப்பாளையம் அகழாய்வின் அறிக்கை.

By admin