• Fri. Mar 27th, 2026

24×7 Live News

Apdin News

கோவை: அடகு வைத்த நிலத்தின் உயிலை தொலைத்த வங்கி – தாயின் கடனை அடைத்த மகன் என்ன செய்தார்?

Byadmin

Mar 27, 2026


கோவை, வேளாண் கடன் வழக்கு, குறைதீர் ஆணையம் தீர்ப்பு, வங்கிக்கு ரூ.12 லட்சம் அபராதம்

பட மூலாதாரம், Getty Images

வேளாண் கடன் தொகையைச் செலுத்திய பின்பும், அடகு ஆவணத்தைத் திரும்பத் தராமலும், கடன் அடமான பத்திரத்தை ரத்து செய்யாமலும் தாமதித்த வங்கி நிர்வாகம், பாதிக்கப்பட்ட பெண் விவசாயிக்கு ரூ.13 லட்சம் வழங்க கோவை நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் கடன் தொகையைச் செலுத்திய பெண் விவசாயியின் மகனே ஆஜராகி வாதிட்டு, இந்த இழப்பீடு உத்தரவைப் பெற்றுள்ளார்.

பொதுவாக வங்கிகள் வாங்கி வைத்திருக்கும் இத்தகைய அசல் பத்திர ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது வங்கி நிர்வாகத்தின் பொறுப்பு என்றும், அது தொலைந்து விடும்பட்சத்தில் பதிவுத்துறையிடம் நகல் வாங்கிக் கொடுத்தாலும், வங்கி நிர்வாகத்தின் சார்பில் இந்த விபரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தர வேண்டுமென்று நுகர்வோர் அமைப்பினர் விளக்குகின்றனர்.

என்ன நடந்தது?

கோவை மாவட்டம் தேவராயபுரத்தைச் சேர்ந்த பெண் விவசாயி பாக்கியலட்சுமி. இவருடைய தந்தை கிருஷ்ணசாமியின் பெயரில் அதே பகுதியில் ஒரு ஏக்கர் 58 சென்ட் பரப்புள்ள விவசாய நிலம் இருந்தது. கடந்த 1992 ஆம் ஆண்டில் அந்த நிலத்தை கிருஷ்ணசாமி, தனது மகள் பாக்கியலட்சுமிக்கு தானமாக அளித்து உயில் எழுதியுள்ளார். அதை தொண்டாமுத்துார் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்துள்ளனர்.

கிருஷ்ணசாமி இறந்த சில ஆண்டுகளுக்குப் பின், கடந்த 2015 ஆம் ஆண்டில், நரசிபுரத்தில் அப்போதைய கார்ப்பரேஷன் வங்கியில் இந்த அசல் உயிலை அடமானம் வைத்து பாக்கியலட்சுமி, ரூ.3 லட்சம் விவசாயக்கடன் வாங்கியுள்ளார். இதற்கான விவசாயக் கடன் அடமான பத்திரமும் (MoD) தொண்டாமுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2015 அக்டோபர் 13 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆண்டில் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், அடுத்த ஆண்டிலும் பாக்கியலட்சுமி மேலும் ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

By admin