• Sat. Feb 1st, 2025

24×7 Live News

Apdin News

கோவை: சோழன் அமைத்த நிழல்படை- இராசகேசரி பெருவழி என்றால் என்ன?

Byadmin

Feb 1, 2025


முதலாம் ஆதித்த கரிகாலனைக் குறிக்கும் கல்வெட்டு

பட மூலாதாரம், YAAKKAI TRUST

கோவையில் காட்டுப் பகுதிக்குள் மறைந்திருக்கும் ஒரு கல்வெட்டு, முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் இருந்த ராசகேசரிப் பெருவழியையும், வணிகர்கள் மற்றும் மக்களுக்குப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டிருந்த சீருடையற்ற நிழல் படையையும் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கிறது. அது எந்தக் கல்வெட்டு?

கோவை மாவட்டத்தில் கோவைப் புதுார் என்ற மாநகர எல்லைப் பகுதிக்கு அருகிலேயே சில மலைப் பகுதிகள் இருக்கின்றன.

வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த காப்புக் காட்டுப் பகுதி, பாலக்காடு கணவாய்க்கு நேர் பாதையில் உள்ளது. அங்கு பாறைகள் சூழ்ந்த புதர்களுக்கு மத்தியில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. வட்டெழுத்துகளில் பொறிக்கப்பட்ட அந்தக் கல்வெட்டு, சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பிற்காலச் சோழ மன்னர்களின் வரிசையில் இரண்டாவது மன்னனாக இருந்த முதலாம் ஆதித்த சோழன் காலத்தைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு, இராஜகேசரிப் பெருவழி என்ற நெடுஞ்சாலையைப் பற்றிக் கூறுகிறது.



By admin