• Sun. Mar 8th, 2026

24×7 Live News

Apdin News

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – 125 நாட்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது எப்படி?

Byadmin

Mar 8, 2026


கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பு வழங்கினார்.

குற்றம் நடந்த சுமார் 125 நாட்களில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த நவம்பர் மாதம் 2ம் தேதி, 3 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் குணா ஆகியோரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்

இவ்வழக்கில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி துவங்கியது. சாட்சிகள் விசாரிக்கப்பட்டு பிப்ரவரி 23ம் தேதி விசாரணை நிறைவு பெற்றது.

By admin