• Fri. Nov 15th, 2024

24×7 Live News

Apdin News

கோவை: மின்கட்டணத்தை குறைக்க தொழில்துறை – முதல்வரிடம் வைத்த கோரிக்கை என்ன?

Byadmin

Nov 14, 2024


முதல்வரின் முதல் கள ஆய்வு: புதிய திட்டங்கள் அறிவித்தும் தொழில்துறையினர் ஏமாற்றம்!

பட மூலாதாரம், FOCIA JAMES

படக்குறிப்பு, தொழில் துறையினருக்கு ஏற்ற கோரிக்கைகளை திட்டங்களாக அறிவிக்கவில்லை என ஏமாற்றம் எழுந்துள்ளது

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக களஆய்வு மேற்கொள்ளும் முதலைமைச்சர் மு.க. ஸ்டாலினின் திட்டத்தில், அவர் முதல் களஆய்வு மேற்கொண்டது கோவையில்.

கடந்த நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள், கோவையில் களஆய்வு மேற்கொண்டு, நடைபெற்றுவரும் திட்டங்களை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், பல புதிய திட்டங்களைத் துவங்கி வைத்தார்.

முதலமைச்சர் பல திட்டங்களைத் துவங்கி வைத்தாலும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட மின் கட்டணம் உட்பட பல கோரிக்கைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்ற குறையும் தொழில் அமைப்பினரின் மத்தியில் எழுந்துள்ளது.

ஆனால், கோவைக்கு முதலமைச்சர் அறிவித்த திட்டங்கள் எல்லாமே தொழில்துறையினர் வைத்த கோரிக்கைகள்தான், என்றும், மின்கட்டணம் தொடர்பான கோரிக்கையிலும் முதலமைச்சர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார், என்றும் கூறுகிறார் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார்.

By admin