• Sun. Nov 17th, 2024

24×7 Live News

Apdin News

கோவை மெட்ரோ ரயில் திட்டம் 13 ஆண்டுகளாகியும் இன்னும் தாமதம் ஏன்? எப்போது தொடங்கும்?

Byadmin

Nov 17, 2024


கோவை மெட்ரோ ரயில் திட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

கடந்த 2011ஆம் ஆண்டில், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, மெட்ரோ ரயில் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தகுதியான நகரங்களாக, இந்தியாவில் 19 இரண்டாம் நிலை நகரங்களை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தேர்வு செய்தது. அந்த பட்டியலில் தமிழகத்திலிருந்து இடம்பெற்றிருந்த ஒரே நகரம், கோவை மட்டுமே.

அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த கொச்சி, புனே ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால், சுமார் 13 ஆண்டுகளாகியும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை. என்ன காரணம்?

By admin