• Fri. Jan 31st, 2025

24×7 Live News

Apdin News

கோவை: மேட்டுப்பாளையத்தில் தம்பி, அவரின் காதலி ஆணவ கொலை; அண்ணனுக்கு கிடைத்த தண்டனை என்ன?

Byadmin

Jan 30, 2025


மேட்டுப்பாளையம்: தம்பி மற்றும் அவரின் காதலியை ஆணவக் கொலை செய்த அண்ணனுக்கு என்ன தண்டனை?

பட மூலாதாரம், Special Arrangement

மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆணவக் கொலை வழக்கில், தம்பியையும், அவரின் காதலியையும் வெட்டிக் கொன்ற அண்ணன் குற்றவாளி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கோவை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பு குறித்துப் பேசிய அரசு வழக்கறிஞர் பவானி பா.மோகன், “இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்கும் வினோத் திட்டமிட்டே ஆயுதத்துடன் அத்துமீறி வீட்டிற்குள்ளே நுழைந்து, சாதியைக் குறிப்பிட்டுக் கடுமையாகப் பேசி கொடூரமாகத் தாக்கி கொன்றுள்ளார், தடுக்க வந்த வர்ஷினியையும் தாக்கிக் கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கில் வினோத்குமாருக்கு இந்திய தண்டனை சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பு வழங்கியுள்ளார்,” என்று கூறியுள்ளார்.

ஆணவக் கொலை பின்னணி என்ன?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி – பூவாத்தாள் தம்பதிக்கு, வினோத்குமார்(25), கனகராஜ்(22), கார்த்திக்(19) என மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் மூவருமே சுமைதூக்கும் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர்.



By admin