• Mon. Jan 13th, 2025

24×7 Live News

Apdin News

கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பாதிப்புகள் என்ன? – மஞ்சளாக மாறிய நிலத்தடி நீர், துர்நாற்றம்

Byadmin

Jan 13, 2025


கோவை: மஞ்சளாக மாறிய நிலத்தடி நீர், துரத்தியடிக்கும் துர்நாற்றம் – வெள்ளலூர் குப்பைக் கிடங்கின் பாதிப்புகள் என்ன?
படக்குறிப்பு, கோவை மாநகராட்சியின் குப்பைகள் அனைத்தும் வெள்ளலூரில் உள்ள குப்பைக் கிடங்கில் குவிக்கப்படுகின்றன.

  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
  • பதவி, பிபிசி தமிழ்

கோவையில் வெள்ளலுார் குப்பைக் கிடங்கு பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து, செயல்திட்ட அறிக்கை தாக்கல் செய்யாவிடில் அபராதம் விதிக்கப்படும் என்று கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு நிரந்தரத் தீர்வு காண இரண்டு ஆண்டுகளாகும் என்று பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன்.

திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் உள்ளாட்சிகள் சார்பில் வருடாந்திர அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கடந்த மார்ச் மாதத்தில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சமர்ப்பித்த வருடாந்திர அறிக்கையின்படி, மொத்தம் 257 சதுர கி.மீ. பரப்பளவில், 100 வார்டுகளை கொண்டுள்ள கோவை மாநகராட்சியின் 2022 மக்கள்தொகை 22,88,052 ஆக இருந்துள்ளது.

By admin