• Thu. Nov 21st, 2024

24×7 Live News

Apdin News

கௌதம் அதானி: அமெரிக்காவில் அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க முயன்றாரா?

Byadmin

Nov 21, 2024


அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி மீது அமெரிக்காவில் வழக்கு

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவில் மோசடி செய்ததாக இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஓர் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாககவும் அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் புதன்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றவியல் வழக்கு, இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான 62 வயதான அதானிக்கு ஒரு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம், துறைமுகங்கள், விமான நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என நீண்டிருக்கும் அவரது வணிகப் பேரரசு மீதும் இருக்கிறது.

குற்றப்பத்திரிகையில், 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படும் தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்திற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, அதானியும் அவரது மூத்த நிர்வாகிகளும் இந்திய அதிகாரிகளுக்குப் பணம் செலுத்த ஒப்புக்கொண்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அதானி குழுமம் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.

By admin