• Mon. Mar 9th, 2026

24×7 Live News

Apdin News

கௌதம் கம்பீர்: பயிற்சியாளராக நீடிக்க மாட்டார் என கருதப்பட்டவர் இன்று அனைவரும் கொண்டாடும் நபராக மாறியது எப்படி?

Byadmin

Mar 9, 2026


தோனி முதல் ஷோயப் அக்தர் வரை அனைவரும் கௌதம் கம்பீரின் ரசிகர்களானது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“கோச் சார், உங்கள் புன்னகை அழகாக இருக்கிறது. உங்களது அந்தத் தீவிரமான முகபாவனையும் புன்னகையும் ஒரு ‘கில்லர் காம்பினேஷன்’. மிகச் சிறப்பு. நண்பர்களே, கொண்டாடுங்கள்”

இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரைப் பற்றி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில், நியூசிலாந்து அணிக்கு 256 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயித்தது. ஆனால் நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, டி20 உலகக்கோப்பையைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றது.

கௌதம் கம்பீர்

பட மூலாதாரம், Getty Images

இந்திய கிரிக்கெட்டில் கம்பீர் மற்றும் தோனி இடையிலான உறவு எப்போதும் விவாதத்திற்குரிய ஒன்றாகவே இருந்து வந்தது.

By admin