சூடானில் போருக்கு நடுவே, உயிரை பணயம் வைத்து கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்
“காலையிலிருந்து ஷெல் தாக்குதல் நடக்கிறது. ஆனால் நாங்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். தினமும் நான் மருத்துவமனைக்குச் சென்று வீடு திரும்புவேன்.” என்கிறார் மருத்துவர் சஃபா அலி.
ஓம்துர்மான் நகரில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க எஞ்சியிருக்கும் மிகச் சில மருத்துவர்களில் சஃபா அலியும் ஒருவர்.
2023 ஆம் ஆண்டில் சூடான் ராணுவத்திற்கும் ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ் படைகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்ததிலிருந்து சூடானில் சுமார் 25,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு