1
கோ என்றால் தலைவன் அல்லது அரசன் என்று பொருள் படும். வேட்கோ என்றால் பானை செய்யும் தலைவன். வேட்கோவர் என்றால் மண்ணைக் காக்கும் தலைவன் என சங்க இலக்கியம் கொண்டாடுகின்றது. வேட்கோ என்பதற்கு மண்ணைச் சுடுபவன் எனவும் பொருள் கொள்ளலாம்.
கலம் செய்கேரி, மண்ணுடையார் மண்ணீட்டாளர், மண்வினை மாக்கள், மண்மகன், வேட்கோ வேட்கோவர் எனவும் குயவர்கள் அழைக்கப்பட்டனர். இவர்கள் கோயில் பணியாளர்களாகவும் பாதுகாவலராகவும், பூசகர் மரபினராகவும், நற்செய்தி சொல்லும் முதுவாய் மக்களாகவும் சங்க காலத்தில் வாழ்ந்துள்ளனர்.
சங்கத்தமிழனால் தலைவனாகப், பெருமனாக மதிக்கப்பட்ட குயவர் குலம் பற்றி சங்க இலக்கியப் பாடல்கள் வழி இப்பதிவில் நாம் காணலாம்.
நற்றிணை 200 – இதுவும் உரைக்க!
கூடலூர் பல் கண்ணனார் எனும் புலவர்,
“யாறு கிடந்ததன்ன அகல் நெடுந் தெருவில்
சாறு என நுவலும் முதுவாய் குயவ”
எனப் பாடுகின்றார். அதாவது ஆறு குறுக்கிட்டுக் கிடந்தால் போன்ற அகன்ற நெடிய தெருவிடத்தே வந்துள்ளோனே! இற்றை நாளில் இவ் ஊரிடத்தே திருவிழா நடைபெறாது நின்றது எனக் கூறுகின்ற “முதுவாய்” அதாவது அறிவு முதிர்ச்சி கொண்ட குயவனே! நீ செல்லும் இடங்களில் இதனையும் அவ்விடங்களில் உள்ளார்க்கு சொல்லிச் செல்வாயாக! எனத் தோழி தலைவியின் குறிப்பறிந்து குயவனை அழைத்து இங்கனம் சொல்லாயோ! எனத் தோழி குயயவனுக்குக் கூறியதாக இப்பாடல் அமைந்துள்ளது.
முன்பொரு பதிவில் “முதுவாய்ப் பெண்டிர்” எனவும் நாம் பார்த்திருந்தோம். அதாவது தெய்வ வாக்கு – விருச்சி சொல்லும் பெண்கள் எனப் பார்த்திருந்தோம். அது போலவே “முதுவாய்க் குயவன்” என இந்தப் பாடலில் வருகிறது. ஊரில் திருவிழா கொண்டாடும் நாளை அறிவிக்கும் அறிவிப்பாளனாகவும், நற்செய்தி சொல்பவனாகவும் இருக்கும் குயவனை இந்தப் பாடலில் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
நற்றிணை 293
கயமனார் எனும் புலவர்
“மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடிப்
பலிக்கள் ஆர்கைப் பார் முது குயவன்”
என பாடுகின்றார். நீல மணி போல தோன்றும் நொச்சியின் பூங்கொத்துகளை சூடிக்கொள்ளும் மரபினை உணர்த்தும் குயவன், காளி கோயில் பூசாரி ஆவான். பலியாகப் பெற்ற கள்ளினையும் குடித்துக் கொள்வான். அதன்பின் தெய்வத்துக்கு இடவேண்டிய பலியை பற்றியும் ஊராருக்கு எடுத்துச் சொல்லியபடி இருப்பானென இப்பாடலில் வருகின்றது. இந்தப் பாடல் மூலம் பெருமைக்குரிய பூசாரியாகவும் குயவர் குலம் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் எனத் தெரிந்து கொள்ளலாம்.
புறநானூறு 32
“வேட்கோச் சிறாஅர் தேர்க் கால்
வைத்த பசுமண் குரூ உத்திரன் போல அவன்”
எனக் கோவூர்கிழார் பாடுகின்றார். அதாவது நல்ல மதி நுட்பம் உடைய வேட்கோவர் குலச் சிறுவர் திகிரியில் (சக்கரத்தில்) வைத்த பசுமண் அவர் கருத்துப் போலெல்லாம் உருவெடுத்ததைப் போல சோழன் நலங்கிள்ளியின் கருத்துப் போலவே இந்த மருத நில நாடு உருவெடுக்கும் எனப் புகழ்ந்து பாடுகின்றார் புலவர். இதில் புலவர் குயவர்களுடைய அறிவு நுட்பத்தை புலப்படுத்துகின்றார்.
புறநானூறு 228 – ஒல்லுமோ நினைக்கே
ஐயூர் முடவனார் எனும் புலவர்,
“கலஞ்செய் கோவே! கலஞ்செய் கோவே!
இருள் திணிந்தன்ன குரூஉத்திரன் பருஉப்புகை அகல்
இரு விசும்பின் ஊன்றும் சூளை நனந்தலை மூதூர் கலஞ்செய் கோவே!”
எனப் பாடுகின்றார். விரி கதிர் சூரியன் வானத்தில் செல்வது போல உலகெங்கும் நிலவிப் புகழப்பட்டவன் செம்பியர் மரபினனான சோழன் கிள்ளிவளவன் ஆவான். அவன் மிகவும் பெரியவன். அவன் தேவருலகம் எய்தினானென்று அவனின் உடலை அடக்கம் செய்ய தாழி வனைய முனைகின்றாய் கலம் வனையும் வேட்கோவே! நின்னால் ஒருபோதும் முடியாது. நிலவட்டமே சக்கரமாகவும் மேரு மலையை மண்ணாகவும் கொண்டு வவனைந்தால் அன்றி அந்தப் பெருந்தகையைக் கவிக்கும்(புதைக்கும்) தாழியை உன்னால் வனைய முடியாது என்கிறார் புலவர். இப்பாடல் மூலம் மன்னர்களைத் தாழியில் இட்டுப் புதைக்கும் மரபும் அறியப்படுகின்றது. அந்தத் தாழியை வனையும் குயவனை “வேட்கோவே” எனப் பெருமை கொண்டு அழைக்கின்றனர் எனவும் தெரிய வருகிறது.
ஆயிரக் கணக்கான முது மக்கள் தாழிகளைக் கொண்ட “ஈமத் தாழிக்காடு” எனக் கொண்டாடப்படும் ஆதிச்சநல்லூரிலும், கீழடியிலும் பல மட்பாண்டப் பொருட்களையும், இன்னும் பல இடங்களிலும், இலங்கையில் புத்தளம் அகழாய்வுகளிலும் பல ஈமத் தாழிகளை, வேறு மண்ணாலான பொருட்களையும் அகழாய்வுகள் மூலம் கண்டெடுத்திருந்தார்கள். அவற்றில் பெண் தெய்வக் குறியீடுகளும், வேறு பல எமது மூதாதையரின் பண்பாட்டு விழுமியங்களையும் பானை ஓடுகளில் காணக் கூடியதாக இருந்தன.
இவற்றை எமக்குத் தந்த தலைவர்கள் “வேட்கோவர்” எனப்படும் பெருமை மிக்க குயவர்களே. இவர்கள் நமது இனத்தின் தலைவர்கள் என்றால் அது மிகையாகாது. இன்று எமது கைகளில் வரலாற்று சாட்சியங்களாக தமது படைப்புக்கள் மூலம் தந்தவர்கள் இவர்கள்.
பல்லாயிரம் ஆண்டுகளாக நம் பண்பாடு காத்தவர்களான வேட்கோவர், இற்றை நாளில் நலிவடைந்து வருவதை நாம் காணும் போது நெருஞ்சி முள் போல ஏதோ சுருக்கென்று குத்துகிறது. இவர்களைக் காக்க வேண்டிய கடப்பாடு நம் அனைவருக்கும் உள்ளது.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 46 | சங்க காலத்தில் உழைக்கும் மகளிர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 45 | சங்ககாலத்தில் காதல் என்னும் அறம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 44 | சங்க காலத்தில் தாய்த் தெய்வ வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 43 | சங்க காலத்தில் தாலி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 42 | தீப் பிழம்பு போன்ற செங்காந்தள் பூ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 41 | புலி தங்கிய வயிறு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 40 | உணர்வுகளை மறைக்காத தலைவியர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 39 | வழிபடவும் வாழ்த்தவும் விளங்கி நின்ற நெல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-38 | சங்க காலத்தில் பறை எனும் பழம் பெரும் இசை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-36 | குடவோலை கண்ட தமிழன் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 35 | உள்ளம் நிறையும் உவமைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 34 | வேளாண் குடி காத்தல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்