1
சங்க காலத்தில் நாழிகைக் கணக்கர் என்பவர்கள் நாழிகை வட்டில் என்னும் ஒரு பாத்திரத்தில் இருந்து துல்லியமாக நேரத்தை அறிந்து அரசனுக்கு அல்லது தமது நாட்டு மக்களுக்கு நேரத்தை அறிவித்துக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் “பொழுதளந்தறியும் பொய்யா மாக்கள்” எனவும் அழைக்கப்பட்டு வந்தனர். நாழிகை வட்டில் என்பதற்கு “குறுநீர்க்கன்னல்’ என்ற பெயரும் சங்க இலக்கியங்களில் இருந்திருக்கின்றது.
இந்த நாழிகைக் கணக்கர் என்பவர்கள் எவ்வாறு அரசுக்கும் தம் மக்களுக்கும் உதவினர் என்பதைச் சங்க இலக்கியச் சான்றுகளோடு இந்தப் பதிவில் ஆய்ந்து நோக்கலாம்.
பண்டைய காலத்தில் பலவிதமான வழியில் என் முன்னோர் நேரத்தைக் கணித்துக் கொண்டனர். மக்கள் தமது நிழலை வைத்தும், புல்லை நிறுத்தி அதன் மூலம் கணித்தும், கோயிலில் சூரிய ஒளியினை கண்டும் நாழிகையைக் கணித்தனர். அதுபோல சூரியனையும் சந்திரனையும் வைத்தும் நேரத்தை கணக்கிட்டு வந்தனர்.
ஆனால் சூரியச் சந்திரனின் உதவி இல்லாத இரவு வேளையில், அவர்களால் நேரத்தைக் கணிக்க முடியாதிருந்தனர். அதனால் அக்காலத்தில் நேரம் காட்டும் கருவிகளும் இருந்திருக்காதபடியால் நாழிகை வட்டில் என்ற ஒரு கருவியைப் பயன்படுத்தினர். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு நடுவில் அதற்குள் இன்னொரு சிறிய பாத்திரத்தை வைத்து அதற்கு சிறு ஊசியளவு துளையும் வைத்தனர்.
சிறிய பாத்திரத்தில் கசிந்து வரும் நீரை அளந்து நாழிகையைக் கணித்தனர்.
அரசாளும் மன்னர்கள் தமது பணியினை உரிய நேரத்தில் செய்து முடிப்பதற்காக வேண்டி நாழிகைக் கணக்கர் என்பவர்கள் உடனிருந்து நேரத்தைக் கணித்து அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நாழிகை என்பது இப்போதைய 24 நிமிடங்கள் ஆகும். நாம் இப்போது பயன்படுத்தும் ஒரு மணி நேர அளவு போல் அன்று ஒரு நாழிகை என்ற கால அளவினைப் பயன்படுத்தி வந்தனர்.
நாழிகை வட்டில் மூலம் இரவும் பகலும் மிகச் சரியான நேரத்தை அறிந்தனர். இதிலிருந்து துல்லியமாக நேரத்தை அறிந்து அரசனுக்கு அறிவித்துக் கொண்டிருப்பார்கள். இந்த நாழிகை வட்டில் அல்லது குறுநீர்கன்னலை மிகவும் கவனமாகக் கவனித்து மணியோசை மூலம் அரண்மனைகளில் ஒரு நாழிகைக்கு ஒரு தடவை அறிவித்துக் கொண்டிருப்பார்கள்.
போர் புரிவதற்காக மன்னர்கள் ஊரெல்லையில் அல்லது பகைவனது நாட்டு எல்லையில் போர்ப் பாசறை அமைக்கும் போது, பொழுது அறிவிப்பதற்காக மிகவும் மதிநுட்பம் வாய்ந்த நாழிகைக் கணக்கரும் உடன் சென்றிருக்கின்றனர். இதனை நாம் பத்துப் பாட்டில் ஒன்றான முல்லைப் பாட்டின் வழி அறியலாம்.
முல்லைப் பாட்டில் நாழிகைக் கணக்கர்
முல்லைப்பாட்டினைப் பாடிய நம்பூதனார், அகப்பொருளான பிரிவாற்றாமை குறித்துப் பாடுகின்றார். தலைவன் போருக்கு சென்றதால் தலைவி படும் துயரத்தைப் பாடுபொருளாகக் இந்த முல்லைப்பாட்டுக் கொண்டது. பாசறையின் இயல்பு, வீரர்கள் தங்கும் படைவீடுகள், அரசனுக்கு அமைத்த பாசறை, மெய்க்காப்பாளர் காவல் புரிதல், நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல் என்பன இதில் விரிவாக அமைந்துள்ளன.
“பொழுதளந்தறியும் பொய்யா மாக்கள்
தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி
எறிநீர் வையகம் வெல்கம் செல்வோம் பின்
குறுநீர்க்கன்னல் இணைத்தென்றிசைப்ப” என வரும் அடிகளில்
மக்கள் வாழ்நாளை இத்துணை என்று அளந்தறியும் பொய்யாத காட்சியுடையவர் நாழிகைக் கணக்கர்.
பகைவரது எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் பாசறையில் நாழிகைக் கணக்கரும் அரசனோடு உடன் இருப்பார். நாழிகை வட்டிலில் இருந்து ஒவ்வொரு பணிக்காகவும் நாழிகையினை வரையறுத்து, தாம் பணிபுரியும் அரசனை வணங்கி வாழ்த்திக் கடந்து போன நாழிகை இவ்வளவு என்பதை ஒவ்வொரு பணி தொடக்கத்திலும் அவர்கள் அறிவித்துக் கொண்டிருந்ததாக செய்தி கிடைக்கின்றது.
தமது தொழிலில் பொய்த்து போகாத நாழிகைக் கணக்கர், மதிநுட்பம் வாய்ந்தவர்களாக இருந்தனர். இவர்கள் வானில் உள்ள நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு நேரத்தைக் கணிக்க வல்லவர்கள். இவர்கள் வானியல் மற்றும் கால அளவுகள் பற்றியும் மிகுந்த அறிவுத் திறமை உடையவர்கள்.
மதுரைக்காஞ்சியில் நாழிகைக் கணக்கர்
பத்துப் பாட்டில் ஒன்றான இன்னொரு இலக்கியம் மதுரைக் காஞ்சி. இதன் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன். புலவர் மாங்குடி மருதனார் வாழ்வும் செல்வமும் இளமையும் நிலையில்லாதன என எடுத்துரைக்க அவனின் குலப் பெருமையையும் வெற்றிச் சிறப்பையும் பாடிவிட்டு மனம் மகிழுமாறு கடற்கரை மணலிலும் அதிகமான எத்தனையோ மன்னர்கள் உன்னைப் போல ஆண்டவர்கள் ஆனாலும் மாண்டவர்கள் ஆயினர் என்று பாடி, இந்த மதுரைக் காஞ்சியை செம்மாந்து நிற்க வைக்கின்றார். இதில் மதுரை மாநகரின் சிறப்பை அவர் கூறுகையில்,
“வேதாளிகரொடு நாழிகை இசைப்ப
இமிழ் முரசு இரங்க, ஏறு மாறு சிலைப்ப”
என வரும் அடியில் மதுரையில், காலை வேளையில், வேதாளிகர் ( மன்னர்களைப் புகழ்ந்து பாடும் அரசவைப் புலவர்கள்) கூத்து இசைத்தனர். நாழிகைக் கணக்கர் நேரத்தை உரைத்தனர். காலையில் முழங்கும் பள்ளியெழுச்சி முரசு ஒலித்தது என வருகின்றது. ஆகவே இந்த நாழிகைக் கணக்கர், தமது குடி மக்களுக்காக உறக்கம் இன்றி நாள் முழுவதும் நாழிகையை அறிவித்துக் கொண்டிருந்தது தெரிய வருகிறது.
அதுபோலவே சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றிலும் குறுநீர்க்கன்னல் அல்லது நாழிகை வட்டில் பற்றிய குறிப்புகள் உள்ளன.
பழங்காலத்தில் மேலத்தேய நாடுகளில், எகிப்தியரால் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்லப்படும் நீர்க் கடிகாரம் புழக்கத்தில் இருந்தது. அது ஒருபுறம் இருக்க எமது முன்னோர்களோ நாழிகை வட்டில் என்பதை சங்க காலத்தில் அதாவது கி.மு ஆறாம் நூற்றாண்டில் இருந்து கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரையான காலத்தில் பயன்படுத்தினார்கள் என்பதை பெருமையுடன் எடுத்துரைக்கின்றன இந்த சங்க இலக்கியச் சான்றுகள். எம் பண்டைத் தமிழர் எவ்வளவு மதி நுட்பம் வாய்ந்தவர்களாக வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பது இதனூடாக எமக்குத் தெரிய வருகின்றது அல்லவா?
நன்றி
சங்க இலக்கியப் பதிவு – 52
சங்க காலத்தில் நாழிகைக் கணக்கர்
சங்க காலத்தில் நாழிகை கணக்கர் என்பவர்கள் நாழிகை வட்டில் என்னும் ஒரு பாத்திரத்தில் இருந்து துல்லியமாக நேரத்தை அறிந்து அரசனுக்கு அல்லது அரசாளும் நாட்டு மண்ணுக்கு நேரத்தை அறிவித்துக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் “பொழுதளந்தறியும் பொய்யா மாக்கள்” எனவும் அழைக்கப்பட்டு வந்தனர். நாழிகை வட்டில் என்பதற்கு “குறுநீர்க்கன்னல்’ என்ற பெயரும் சங்க இலக்கியங்களில் இருந்திருக்கின்றது.
இந்த நாழிகைக் கணக்கர் என்பவர்கள் எவ்வாறு அரசுக்கும் தம் மக்களுக்கும் உதவினர் என்பதைச் சங்க இலக்கியச் சான்றுகளோடு இந்தப் பதிவில் ஆய்ந்து நோக்கலாம்.
பண்டைய காலத்தில் பலவிதமான வழியில் என் முன்னோர் நேரத்தை கணித்துக் கொண்டனர். மக்கள் தமது நிழலை வைத்தும், புல்லை நிறுத்தி அதன் மூலம் கணித்தும், கோயிலில் சூரிய ஒளியினை கண்டும் நாழிகையைக் கணித்தனர். அதுபோல சூரியனையும் சந்திரனையும் வைத்தும் நேரத்தை கணக்கிட்டு வந்தனர்.
ஆனால் சூரியச் சந்திரனின் உதவி இல்லாத இரவு வேளையில், அவர்களால் நேரத்தைக் கணிக்க முடியாதிருந்தனர்.அதனால் அக்காலத்தில் நேரம் காட்டும் கருவிகளும் இருந்திருக்காதபடியால் நாழிகை வட்டில் என்ற ஒரு கருவியைப் பயன்படுத்தினர். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு நடுவில் அதற்குள் இன்னொரு சிறிய பாத்திரத்தை வைத்து அதற்கு சிறு ஊசியளவு துளையும் வைத்தனர்.
சிறிய பாத்திரத்தில் கசிந்து வரும் நீரை அளந்து நாழிகையைக் கணித்தனர்.
அரசாளும் மன்னர்கள் தமது பணியினை உரிய நேரத்தில் செய்து முடிப்பதற்காக வேண்டி நாழிகைக் கணக்கர் என்பவர்கள் உடனிருந்து நேரத்தைக் கணித்து அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நாழிகை என்பது இப்போதைய 24 நிமிடங்கள் ஆகும். நாம் இப்போது பயன்படுத்தும் ஒரு மணி நேர அளவு போல் அன்று ஒரு நாழிகை என்ற கால அளவினைப் பயன்படுத்தி வந்தனர்.
நாழிகை வட்டில் மூலம் இரவும் பகலும் மிகச் சரியான நேரத்தை அறிந்தனர். இதிலிருந்து துல்லியமாக நேரத்தை அறிந்து அரசனுக்கு அறிவித்துக் கொண்டிருப்பார்கள். இந்த நாழிகை வட்டில் அல்லது குறுநீர்கன்னலை மிகவும் கவனமாகக் கவனித்து மணியோசை மூலம் அரண்மனைகளில் ஒரு நாழிகைக்கு ஒரு தடவை அறிவித்துக் கொண்டிருப்பார்கள்.
போர் புரிவதற்காக மன்னர்கள் ஊரெல்லையில் அல்லது பகைவனது நாட்டு எல்லையில் போர்ப் பாசறை அமைக்கும் போது, பொழுது அறிவிப்பதற்காக மிகவும் மதிநுட்பம் வாய்ந்த நாழிகைக் கணக்கரும் உடன் சென்றிருக்கின்றனர். இதனை நாம் பத்துப் பாட்டில் ஒன்றான முல்லைப் பாட்டின் வழி அறியலாம்.
முல்லைப் பாட்டில் நாழிகைக் கணக்கர்
முல்லைப்பாட்டினைப் பாடிய நம்பூதனார், அகப்பொருளான பிரிவாற்றாமை குறித்து பாடுகின்றார். தலைவன் போருக்கு சென்றதால் தலைவி படும் துயரத்தை பாடுபொருளாகக் இந்த முல்லைப்பாட்டுக் கொண்டது. பாசறையின் இயல்பு, வீரர்கள் தங்கும் படைவீடுகள், அரசனுக்கு அமைத்த பாசறை, மெய்க்காப்பாளர் காவல் புரிதல், நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல் என்பன இதில் விரிவாக அமைந்துள்ளன.
“பொழுதளந்தறியும் பொய்யா மாக்கள்
தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி
எறிநீர் வையகம் வெல்கம் செல்வோம் பின்
குறுநீர்க்கன்னல் இணைத்தென்றிசைப்ப” என வரும் அடிகளில்
மக்கள் வாழ்நாளை இத்துணை என்று அளந்தறியும் பொய்யாத காட்சியுடையவர் நாழிகைக் கணக்கர்.
பகைவரது எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் பாசறையில் நாழிகைக் கணக்கரும் அரசனோடு உடன் இருப்பார். நாழிகை வட்டிலில் இருந்து ஒவ்வொரு பணிக்காகவும் நாழிகையினை வரையறுத்து, தாம் பணிபுரியும் அரசனை வணங்கி வாழ்த்திக் கடந்து போன நாழிகை இவ்வளவு என்பதை ஒவ்வொரு பணி தொடக்கத்திலும் அவர்கள் அறிவித்துக் கொண்டிருந்ததாக செய்தி கிடைக்கின்றது.
தமது தொழிலில் பொய்த்து போகாத நாழிகைக் கணக்கர், மதிநுட்பம் வாய்ந்தவர்களாக இருந்தனர். இவர்கள் வானில் உள்ள நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு நேரத்தை கணிக்க வல்லவர்கள். இவர்கள் வானியல் மற்றும் கால அளவுகள் பற்றியும் மிகுந்த அறிவுத் திறமை உடையவர்கள்.
மதுரைக்காஞ்சியில் நாழிகைக் கணக்கர்
பத்துப் பாட்டில் ஒன்றான இன்னொரு இலக்கியம் மதுரைக் காஞ்சி. இதன் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன். புலவர் மாங்குடி மருதனார் வாழ்வும் செல்வமும் இளமையும் நிலையில்லாதன என எடுத்துரைக்க அவனின் குலப் பெருமையையும் வெற்றிச் சிறப்பையும் பாடிவிட்டு மனம் மகிழுமாறு கடற்கரை மணலிலும் அதிகமான எத்தனையோ மன்னர்கள் உன்னைப் போல ஆண்டவர்கள் ஆனாலும் மாண்டவர்கள் ஆயினர் என்று பாடி, இந்த மதுரைக் காஞ்சியை செம்மாந்து நிற்க வைக்கின்றார். இதில் மதுரை மாநகரின் சிறப்பை அவர் கூறுகையில்,
“வேதாளிகரொடு நாழிகை இசைப்ப
இமிழ் முரசு இரங்க, ஏறு மாறு சிலைப்ப”
என வரும் அடியில் மதுரையில், காலை வேளையில், வேதாளிகர் ( மன்னர்களைப் புகழ்ந்து பாடும் அரசவைப் புலவர்கள்) கூத்து இசைத்தனர். நாழிகைக் கணக்கர் நேரத்தை உரைத்தனர். காலையில் முழங்கும் பள்ளியெழுச்சி முரசு ஒலித்தது, என வருகின்றது. ஆகவே இந்த நாழிகை கணக்கர், தமது குடி மக்களுக்கு உறக்கம் இன்றி நாள் முழுவதும் நாழிகை அறிவித்துக் கொண்டிருப்பது தெரிய வருகிறது.
அதுபோலவே சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றிலும் குறுநீர்க்கன்னல் அல்லது நாழிகை வட்டில் பற்றிய குறிப்புகள் உள்ளன.
மேலத்தேய நாடுகளில், எகிப்தியரால் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்லப்படும் நீர்க் கடிகாரம் புழக்கத்தில் இருந்தது. அது ஒருபுறம் இருக்க எமது முன்னோர்களோ நாழிகை வட்டில் என்பதை சங்க காலத்தில் அதாவது கி.மு ஆறாம் நூற்றாண்டில் இருந்து கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரையான காலத்தில் பயன்படுத்தினார்கள் என்பதை பெருமையுடன் எடுத்துரைக்கின்றன இந்த சங்க இலக்கியச் சான்றுகள். எம் பண்டைத் தமிழர் எவ்வளவு மதி நுட்பம் வாய்ந்தவர்களாக வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பது இதனூடாகத் தெரிய வருகின்றது அல்லவா?
ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு -51 | சங்க காலத்தில் கூத்து | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 50 | சங்க காலத்தில் கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 49 | சங்க இலக்கியங்களில் கொன்றை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 48 | சங்க காலத்தில் ஏறு தழுவுதல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 47 | சங்க காலத்தில் வேட்கோ என அழைக்கப்பட்ட குயவர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 46 | சங்க காலத்தில் உழைக்கும் மகளிர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 45 | சங்ககாலத்தில் காதல் என்னும் அறம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 44 | சங்க காலத்தில் தாய்த் தெய்வ வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 43 | சங்க காலத்தில் தாலி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 42 | தீப் பிழம்பு போன்ற செங்காந்தள் பூ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 41 | புலி தங்கிய வயிறு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 40 | உணர்வுகளை மறைக்காத தலைவியர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 39 | வழிபடவும் வாழ்த்தவும் விளங்கி நின்ற நெல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-38 | சங்க காலத்தில் பறை எனும் பழம் பெரும் இசை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-36 | குடவோலை கண்ட தமிழன் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 35 | உள்ளம் நிறையும் உவமைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 34 | வேளாண் குடி காத்தல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்