• Thu. Sep 4th, 2025

24×7 Live News

Apdin News

சசிகலாவை நான் சந்திக்கவில்லை: செங்கோட்டையன் மறுப்பு | Sengottaiyan says i have not met Sasikala

Byadmin

Sep 4, 2025


திருப்பூர்: அதி​முக மூத்த தலை​வர் கே.ஏ.செங்​கோட்​டையன், நேற்று முன்தினம் ஈரோடு மாவட்​டம் கோபி​யில் உள்ள கட்சி அலு​வல​கத்​தில் கட்​சி​யினருடன் 3 மணி நேரத்​துக்​கும் மேலாக ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டார். தொடர்ந்து 5-ம் தேதி (நாளை) மனம் திறந்து செய்​தி​யாளர்​களிடம் பேச உள்​ள​தாகக் கூறி கட்​சி​யில் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்தி உள்​ளார்.

இந்​நிலை​யில் கே.ஏ.செங்​கோட்​டையன், திருப்​பூர் மாவட்​டம் பெரு​மாநல்​லூரில் நடந்த திருமண நிகழ்வில் பங்​கேற்க நேற்று வந்​தார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர், “நான் சசிகலாவை சந்​திக்​க​வில்​லை,” என்​றார். “வேறு கட்​சி​யில் இணை​கிறீர்​களா?” என கேள்விக்கு, நாளை அனைத்துக்​கும் பதில் அளிப்​ப​தாகத் தெரி​வித்​தா​ர்​.



By admin