• Sun. Aug 24th, 2025

24×7 Live News

Apdin News

சசிகுமார் வெளியிட்ட நடிகை பூர்ணிமா ரவியின் ‘யெல்லோ’ பட ஃபர்ஸ்ட் லுக்

Byadmin

Aug 24, 2025


‘பிக் பொஸ் ‘மூலம் சின்னத்திரை ரசிகர்களிடமும், ‘சிவப்பி’ படத்தின் மூலம் டிஜிட்டல் தள ரசிகர்களிடமும்  ‘ட்ராமா’ படத்தின் மூலமாக சினிமா ரசிகர்களிடமும் அறிமுகமாகி பிரபலமான நடிகை பூர்ணிமா ரவி கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘யெல்லோ’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை இயக்குநரும், நடிகருமான சசிகுமார் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘யெல்லோ’ எனும் திரைப்படத்தில் பூர்ணிமா ரவி, வைபவ் முருகேசன், நமிதா கிருஷ்ணமூர்த்தி, சாய் பிரசன்னா, பிரபு சாலமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அபி ஆத்விக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கிளிஃபி கிறிஸ் –  ஆனந்த் காசிநாத் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை கோவை பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்த் ரங்கசாமி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தருணத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பூர்ணிமா ரவியின் தோற்றமும், நிலவியல் பின்னணியும், ‘இந்த உலகம் அடுத்த நொடிக்கான ஆச்சரியங்களை தன்னுள் மறைத்து கொண்டுள்ளது’ என்ற வாசகமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

By admin