• Wed. Oct 16th, 2024

24×7 Live News

Apdin News

சஞ்சய் குமார் வர்மா: இந்தியா கனடாவிலிருந்து திரும்பப் பெறும் தூதரின் பின்புலம் என்ன?

Byadmin

Oct 16, 2024


இந்தியா, கனடா

பட மூலாதாரம், HCI_Ottawa

படக்குறிப்பு, கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா

கடந்த ஆண்டு கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ராஜதந்திரச் சிக்கலை உருவாக்கியுள்ளது.

இம்முறை, நிஜ்ஜார் கொலை வழக்கில், கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் வர்மாவின் பெயரையும் மற்ற இந்தியத் தூதரக அதிகாரிகளின் பெயரையும் கனடா தொடர்புபடுத்தியுள்ளது.

கனடாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த இந்தியா, டெல்லியில் இருக்கும் இந்தியாவுக்கான கனடா தூதர் ஸ்டீவர்ட் ராஸ் வீலர் உள்ளிட்ட 6 பேரை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.

இந்தியா கனடாவுக்கான தனது தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் பிற தூதரக அதிகாரிகளை நாடு திரும்புமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறியிருக்கிறது. ஆனால் கனடா அவர்களை வெளியேற்றியதாகக் கூறியுள்ளது.

By admin