• Sat. Mar 7th, 2026

24×7 Live News

Apdin News

சஞ்சு சாம்சன் அணியில் இடம் இருந்தாலும் ஒரு போட்டியில் கூட விளையாத வாய்ப்பு கிடைக்காத நிலை மாறியது எப்படி?

Byadmin

Mar 7, 2026


'நாட்டுக்காக 9வது இடத்திலும் விளையாடுவேன்' - 'சேட்டா' சஞ்சு சாம்சன் கதை

பட மூலாதாரம், Getty Images

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக கடைசி இரண்டு முக்கியமான ஆட்டங்களில் தொடர்ச்சியாக 2 பெரிய இன்னிங்ஸ்களை ஆடியதன் மூலம் சஞ்சு சாம்சன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்திய டி20 அணியில் தனக்கான இடத்தைப் பிடிக்க பல வருடங்களாகப் போராடி வந்த அவருக்கு இந்த இரண்டு ஆட்டங்களும் பெரும் உத்வேகத்தை அளித்திருக்க வேண்டும்.

ஐபிஎல் போட்டிகளில் சஞ்சு சாம்சனின் பேட்டிங் திறனை அனைவரும் பார்த்திருப்பார்கள். அதைப் பார்த்த பிறகுதான் ராகுல் டிராவிட் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்.

19 வயதில் நாட்டிற்காக சர்வதேச அளவில் அறிமுகமான சஞ்சு, முப்பது வயதை எட்டிய பிறகும் போராடி வருகிறார்.

சஞ்சு சாம்சன், கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

கிரிக்கெட்டில் அவரது ஃபார்மின் ஏற்ற இறக்கங்களாலும், இந்திய கிரிக்கெட்டில் திறமையான வீரர்கள் எக்கச்சக்கமாக இருந்ததாலும் அதிகரித்த போட்டி சஞ்சுவுக்கு ஒரு சவாலாக இருந்தது.

By admin