• Mon. Mar 9th, 2026

24×7 Live News

Apdin News

சஞ்சு சாம்சன்: இந்திய அணியில் இடம்பெறவே போராடிய சாம்சன் வெற்றி நாயகனான கதை

Byadmin

Mar 9, 2026


டி20 உலகக்கோப்பை, சஞ்சு சாம்சன், இந்தியா சாம்பியன்,

பட மூலாதாரம், Getty Images

“நியூசிலாந்து தொடருக்குப் பிறகு நான் மனமுடைந்து போனேன். என் கனவு மீண்டும் நொறுங்கிவிட்டது போல உணர்ந்தேன்.”

ஐசிசி டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் வென்ற பிறகு தொடர் நாயகன் விருதை சஞ்சு சாம்சன் வென்ற போது, அவர் மனமுடைந்து போயிருந்த நேரத்தின் நினைவுகள் மீண்டும் மனதில் தோன்றியிருக்கலாம்.

இந்திய அணியுடனான தனது பயணம் அத்துடன் முடிந்துவிட்டது என்று அந்த நேரத்தில் மனதளவில் அவர் ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்.

கடந்த ஜனவரி 31-ஆம் தேதி இந்தியா – நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டி நடைபெற்றது. டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக இந்தியா விளையாடிய கடைசி டி20 போட்டியும் அது தான்.

அந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். டி20 போட்டிகளில் தொடர்ந்து அவர் 11வது முறையாக அரைசதம் அடிக்கவில்லை.

By admin