• Tue. Mar 3rd, 2026

24×7 Live News

Apdin News

சஞ்சு சாம்சன் குறித்து பாகிஸ்தானில் வியந்து பேசப்படுவது என்ன?

Byadmin

Mar 3, 2026


சஞ்சு சாம்சன்

பட மூலாதாரம், Alex Davidson-ICC/ICC via Getty Images

படக்குறிப்பு, சஞ்சு சாம்சனின் இன்னிங்ஸிற்குப் பிறகு அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்திலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

‘கோலியின் இடத்தை சஞ்சு சாம்சன் நிரப்புகிறார்’

‘சஞ்சு தனது சாதனையைக் காட்டிலும் அணியின் நலனுக்கே முன்னுரிமை அளித்தார்’

‘அவருக்கு அநீதி இழைக்கப்பட்டது, ஆனால் அவர் எவ்வளவு உறுதியான மனதிடம் கொண்ட வீரர் என்பதை நிரூபித்துவிட்டார்.’

இவை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் சஞ்சு சாம்சன் குறித்து தெரிவித்துள்ள சில கருத்துக்கள்.

டி20 உலகக் கோப்பையில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், அவர் 50 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திடும் இன்னிங்ஸை விளையாடினார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான அந்த முக்கிய போட்டியில், இந்தியாவை வெற்றி பெறச் செய்து அரையிறுதிக்கு இட்டுச் சென்ற இன்னிங்ஸ் அது.

By admin