0
இசையமைப்பாளரும் , முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி புதிதாக நடிக்கும் திரைப்படத்திற்கு, ‘லாயர் ‘ என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
‘ ஜென்டில்வுமன் ‘படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் உருவாகும் ‘லாயர் ‘எனும் திரைப்படத்தில் விஜய் அண்டனி கதையின் நாயகனாக – சட்டத்தரணியாக நடிக்கிறார். இவருடன் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி பிலிம் கொர்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ” நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. திரையில் இதுவரை காட்சிப்படுத்தப்படாத வகையில் யதார்த்தமான இந்திய நீதிமன்ற நடைமுறைகளை காட்சிப்படுத்தவுள்ளோம். இதில் பிரபல பொலிவூட் நடிகை ஒருவர் கதையின் நாயகியாக நடிக்கவுள்ளார் ” என்றார்.