0
புத்தளம் வென்னப்புவை – வெல்லமங்கரை மீன்பிடித் துறைமுகத்தில், வெள்ளிக்கிழமை (23) நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 870 கிலோகிராமுக்கும் அதிகமான சுறா மீன்களுடன் ஏழு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து, சுமார் 876.2 கிலோகிராம் சுறா மீன்கள் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடலோர காவற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட சுறா மீன்கள் மற்றும் மீன்பிடி படகுடன், சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் மீன்வள விதிமுறைகளின் கீழ் சுறா மீன்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், சுறா மீன்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும் பாதுகாப்பு கவலைகள் காரணமாக பல இனங்கள் பாதுகாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.