• Thu. Dec 18th, 2025

24×7 Live News

Apdin News

சட்டவிரோதமாக முதலைக் குட்டியை வைத்திருந்தவர் கைது!

Byadmin

Dec 18, 2025


களுத்துறை,  அளுத்கம, களுவமோதர பகுதியில் சட்டவிரோதமாக முதலைக் குட்டி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் ஹிக்கடுவை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் இன்று புதன்கிழமை  (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

44 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, சந்தேக நபருக்கு எதிராக ரூ. 70,000.00 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதலைக் குட்டியை பொருத்தமான சூழலில் விடுவித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் கால்நடை வைத்தியர்களுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முதலைகள் வனவிலங்கு பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய ஊர்வனவாகும். இந்த நிலையில், முதலைக் குட்டிகளை வைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குக் காட்டி பணம் சம்பாதிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சில காலமாகக் அவதானிக்கப்பட்டு வருவதுடன் அவர்களை கைது செய்ய வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By admin