• Wed. Feb 18th, 2026

24×7 Live News

Apdin News

சட்லஜ் நதி வெள்ளத்தில் பாகிஸ்தானுக்கு அடித்துச் சென்ற 3 பேர் 30 மாதங்கள் கழித்து இந்தியா திரும்பியது எப்படி?

Byadmin

Feb 18, 2026


ஜோகிந்தர் சிங், குர்மேஜ் சிங், சிந்தர் சிங், பாகிஸ்தான்

பட மூலாதாரம், KuldeepBrar/BBC

படக்குறிப்பு, ஜோகிந்தர் சிங் மற்றும் குர்மேஜ் சிங் 30 மாதங்களுக்குப் பிறகு தான் பாகிஸ்தானிலிருந்து திரும்ப முடிந்தது

அது 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த விஷயம். பஞ்சாபில் பெய்த பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால், சட்லஜ் நதிக்கரையோர நிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் விவசாயிகளின் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.

பெரோஸ்பூர் மாவட்டத்தின் கில்சே கிராமத்தைச் சேர்ந்த ஜோகிந்தர் சிங், குர்மேஜ் சிங் மற்றும் சிந்தர் சிங் ஆகியோர் வெள்ளத்தின் போது தங்கள் டிராக்டரை உயரமான இடத்துக்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது சட்லஜ் ஆற்றில் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்த வலுவான நீரோட்டம் அவர்களை அடித்துச் சென்றது.

அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து குடும்பத்தினருக்கு எந்தத் தகவலும் தெரியவில்லை. பின்னர், பாகிஸ்தானில் இருந்து கிடைத்த செய்திகளின் மூலம், அவர்கள் நதியின் வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு பாகிஸ்தானை அடைந்தது தெரியவந்தது.

அவர்களது குடும்பத்தினர், உள்ளூர் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. பின்னர், இரு நாடுகளின் ஒப்புதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் அரசு சமீபத்தில் மூவரையும் இந்தியாவிடம் ஒப்படைத்தது.

‘திரும்பி வருவோம் என்ற நம்பிக்கை இல்லை’

ஜோகிந்தர் சிங், குர்மேஜ் சிங், சிந்தர் சிங், பாகிஸ்தான், சட்லஜ் நதி

பட மூலாதாரம், KuldeepBrar/BBC

படக்குறிப்பு, தனது குடும்பத்தினருடன் குர்மேஜ் சிங் (இடது)

“எங்கள் விவசாய நிலம் எல்லைக்கு அருகில் உள்ளது. அப்போது டிராக்டர் தண்ணீரில் சிக்கிக்கொண்டது. அதை மீட்பதற்காக நாங்கள் சென்றபோது, நதியின் வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு பாகிஸ்தானை அடைந்தோம்.” என்கிறார் ஜோகிந்தர் சிங்

By admin