• Sun. May 11th, 2025

24×7 Live News

Apdin News

சண்டை நிறுத்தம் பற்றி விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன? தொலைபேசியில் வந்த தகவல் என்ன?

Byadmin

May 10, 2025


காணொளிக் குறிப்பு, மோதலை நிறுத்த முடிவு

பாகிஸ்தானிலிருந்து வந்த அழைப்பு: சண்டை நிறுத்தம் பற்றி விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன?

இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன.

இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியாவும் பாகிஸ்தானும் ‘நிலம், வான் மற்றும் கடல் வழி’ தாக்குதலை இந்திய நேரப்படி இன்று மாலை 5:00 மணி முதல் நிறுத்தும் என கூறியுள்ளார்.

மேலும் அவர், “பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் சனிக்கிழமை பிற்பகல் 3.35 மணிக்கு இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலை தொடர்பு கொண்டார்.

இரு தரப்பினரும் தரை, வான் மற்றும் கடல் வழியாக அனைத்து தாக்குதல் மற்றும் ராணுவ நடவடிக்கைகளையும் இந்திய நேரப்படி 5 மணி முதல் நிறுத்துவது என ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வைச் செயல்படுத்தச் சனிக்கிழமை இரு தரப்புக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ அதிகாரிகள் மீண்டும் திங்கட்கிழமை மதியம் 12 மணிக்கு இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவர்.” என்றார்

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin