0
நடிகர் சண்முக பாண்டியன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘கொம்பு சீவி ‘எனும் திரைப்படத்தின் பிரத்யேக காணொளியை அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நட்சத்திர இயக்குநர் பொன். ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கொம்பு சீவி ‘எனும் திரைப்படத்தில் சண்முக பாண்டியன் , சரத்குமார் , காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ் த. செல்லையா தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தருணத்தில் கதையின் நாயகனாக நடித்து வரும் சண்முக பாண்டியனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்காக படக் குழுவினர் பிரத்யேக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இது சண்முக பாண்டியனின் ரசிகர்களையும், மறைந்த ‘கேப்டன் ‘ விஜயகாந்தின் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி இருக்கிறது.