• Mon. Dec 29th, 2025

24×7 Live News

Apdin News

சத்தீஸ்கர்: கிறிஸ்தவத்துக்கு மதம் மாறியவர்களின் இறுதிச்சடங்குகளில் நீடிக்கும் சர்ச்சை

Byadmin

Dec 29, 2025


இறுதியாக, கடந்த வெள்ளிக்கிழமை, புனியா பாய் சாஹுவின் குடும்பத்தினர் மீண்டும் இந்து மதத்திற்கு மாறிய பிறகு அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

பட மூலாதாரம், Alok Putul

படக்குறிப்பு, புனியா பாய் சாஹுவின் குடும்பத்தினர் இந்து மதத்திற்கு மாறிய பிறகு அவரது இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தில் உள்ள போராய் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான புனியா பாய் சாஹு, தனது வாழ்வின் இறுதிப் பயணம் இவ்வளவு நீளமாக இருக்கும் என்று ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாற எடுத்த முடிவு, அவரது மரணத்திற்குப் பிறகு ஒரு பெரிய கேள்வியாக மாறியது. இதனால் அவரது உடல் அடக்கம் செய்யப்பட முடியாமல் மூன்று நாட்களாக கிராமம் கிராமமாக அலைக்கழிக்கப்பட்டது.

இறுதியாக, கடந்த வெள்ளிக்கிழமை, புனியா பாய் சாஹுவின் குடும்பத்தினர் மீண்டும் இந்து மதத்திற்கு மாறிய பிறகு அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகளின் முன்னிலையில், குடும்ப உறுப்பினர்கள் கிராம மக்களிடமும் இந்து அமைப்புகளிடமும் மன்னிப்பு கேட்டனர்.

மேலும், எதிர்காலத்தில் தங்களுக்குக் கிறிஸ்தவ மதத்துடன் எந்தத் தொடர்பும் இருக்காது என்று எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தனர்.

By admin