• Fri. Jan 24th, 2025

24×7 Live News

Apdin News

சத்தீஸ்கர்: தந்தை இறந்து 15 நாட்களுக்கு மேலாகியும் இறுதிச் சடங்குகளை செய்ய முடியாத மகன் – ஏன்?

Byadmin

Jan 24, 2025


ரமேஷ்

பட மூலாதாரம், Sunil Kashyap/BBC Hindi

படக்குறிப்பு, ரமேஷ் பாகேலை அவரது தந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்ய அவரது கிராம மக்கள் அனுமதிக்கவில்லை.

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் வசிக்கும் ரமேஷ் பாகேலுடைய தந்தையின் உடல் கடந்த 15 தினங்களுக்கு மேலாக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

பூர்வீக கிராமம், வீடு மற்றும் நிலம் இருந்தும், ரமேஷ் பாகேலால் தனது தந்தை சுபாஷ் பாகேலின் இறுதிச் சடங்குகளைச் செய்ய முடியவில்லை.

தான் ஒரு கிறிஸ்தவர் என்பதால், சொந்த கிராமமான சிந்த்வாரா கிராம மக்கள் தனது தந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்ய அனுமதிக்கவில்லை என்று ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த கிராமம் சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள தர்பா தாலுகாவில் உள்ளது.

By admin