• Mon. Oct 7th, 2024

24×7 Live News

Apdin News

சத்தீஸ்கர்: போலி எஸ்பிஐ வங்கிக் கிளை நடத்திய கும்பல் – உண்மை வெளிப்பட்டது எப்படி?

Byadmin

Oct 7, 2024


சத்தீஸ்கர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
படக்குறிப்பு, பாரத ஸ்டேட் வங்கி பெயரில் திறக்கப்பட்ட போலி வங்கிக்கிளை

சத்தீஸ்கரில் உள்ள பன்பராஸ் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி யாதவ் கடந்த வாரம் வரை ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – சப்போரா கிளை’ என்றழைக்கப்பட்ட ஒரு வங்கிக் கிளையில் பணியாற்றி வந்தார். ஆனால், அது உண்மையில் வங்கியே இல்லை என்பதை அவரால் இன்னும் நம்ப முடியவில்லை.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரிகள் சிலர் போலீஸாருடன் அந்த வங்கிக் கிளைக்கு வந்தபோதுதான், ​​ஜோதிக்கு அந்த வங்கியின் நிர்வாகக் குழுவில் இருந்து, வங்கி ஊழியர்கள், தனது பணி நியமனக் கடிதம் என அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது.

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 20 0கி.மீ. தொலைவில் உள்ள சக்தி மாவட்டத்தில் உள்ள சப்போரா கிராத்தினர் இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த வழக்கில் அனில் பாஸ்கர் என்ற நபரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவரது கூட்டாளிகள் 8 பேரைத் தேடி வருகின்றனர்.

By admin