தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களான சத்யராஜ் – வெற்றி முதன்மையான வேடங்களில் இணைந்து நடித்திருக்கும் ‘4 விண்டோஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘புளிப்பு’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் நரேந்திரன் மூர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் ‘4 விண்டோஸ்’ திரைப்படத்தில் சத்யராஜ் , வெற்றி, பிரார்த்தனா நாதன், கோவை சரளா, சின்னி ஜெயந்த் , சச்சு, எம் எஸ் பாஸ்கர், கூல் சுரேஷ் ,மாறன், அருள்தாஸ், லிசி அண்டனி, வையாபுரி, டி எஸ் ஆர் ,டி எம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெரார்ட் ஃபிலிக்ஸ் இசையமைத்திருக்கிறார்.கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சேகர் ஜி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் இளையராஜா சேகர் தயாரித்திருக்கிறார்.
படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் படத்தில் இடம்பெற்ற ‘ தம்மாசி..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது .
இந்தப் பாடலை பாடலாசிரியர் கு . கார்த்திக் மற்றும் கானா வினோத் ஆகியோர் இணைந்து எழுத ,பின்னணி பாடகர்கள் கானா வினோத் மற்றும் ஜெரார்ட் ஃபிலிக்ஸ் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். துள்ளல் இசை பாணியில் தயாராகி இருக்கும் இந்த பாடல் இணைய தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
The post சத்யராஜ் – வெற்றி இணைந்து நடிக்கும் ‘ 4 விண்டோஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு appeared first on Vanakkam London.