• Wed. Feb 26th, 2025

24×7 Live News

Apdin News

சந்தரா: சமணர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இறக்கும் நடைமுறையை பின்பற்றுவது ஏன்?

Byadmin

Feb 26, 2025


தனது இறுதி உண்ணாவிரதத்தின் போது உறவினருடன் பேசும் சாயர் தேவி

பட மூலாதாரம், Pranay Modi

படக்குறிப்பு, தனது இறுதி விரதத்தின்போது சாயர் தேவி

கருப்பை வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, 88 வயதான சாயர் தேவி மோதி சிகிச்சை பெற வேண்டாம் என்று முடிவு செய்தார். அதற்குப் பதிலாக, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அவர் முடிவு செய்தார்.

“ஜூன் 25ஆம் தேதியன்று வந்த அவரது பயாப்ஸி பரிசோதனை முடிவு, அவருக்குப் புற்றுநோய் பரவுவதைக் காட்டியது. 2024ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி, அவர் பிரார்த்தனை செய்துவிட்டு சூப் சாப்பிட்டார். அடுத்த நாள் எங்களை அழைத்து சந்தரா மேற்கொள்ளும் தனது விருப்பத்தை எங்களிடம் கூறினார்” என்று அவரது பேரன் பிரனய் மோதி நினைவு கூர்ந்தார்.

சல்லேகானா என்றும் அழைக்கப்படும் சந்தரா என்பது உணவு மற்றும் தண்ணீரைக் கைவிட்டு மரணத்தைத் தழுவுவதை உள்ளடக்கிய நடைமுறை. இது சமண மதத்தைப் பின்பற்றும் சிலரால் கடைபிடிக்கப்படுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த நடைமுறை, சமண மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றல்ல. இந்திய ஊடக செய்திகள், ஒவ்வோர் ஆண்டும் சமண மதத்தைச் சேர்ந்த சுமார் 200 முதல் 500 நபர்கள் மட்டுமே இந்த முறையிலான மரணத்தைத் தேர்வு செய்வதாக மதிப்பிடுகின்றன.

By admin