• Wed. Feb 11th, 2026

24×7 Live News

Apdin News

சந்திர சிங் கார்வாலி: ஆங்கிலேயர் உத்தரவிட்டும் இந்தியர்களை சுட மறுத்த இவர் என்ன ஆனார்? ஒரு வரலாற்றுப் பார்வை

Byadmin

Feb 11, 2026


இளமைப் பருவத்தில் சந்திர சிங் கார்வாலி

பட மூலாதாரம், National Book Trust

படக்குறிப்பு, இளமைப் பருவத்தில் சந்திர சிங் கார்வாலி

    • எழுதியவர், ரேஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி ஹிந்தி
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

1930ஆம் ஆண்டில் காந்தியின் உப்புச் சத்தியாகிரகத்தின் தாக்கம் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் அதிகமாகத் தென்பட்டது.

‘எல்லை காந்தி’ என்று பிரபலமாக அறியப்பட்ட கான் அப்துல் கஃபார் கானின் வளர்ந்து வரும் செல்வாக்கைக் கண்டு, ஆங்கிலேய அரசு அவரையும் அவரது சில தோழர்களையும் ஏப்ரல் 23ஆம் தேதி காலையில் கைது செய்தது.

கான் அந்த நேரத்தில் உத்மன்சாயிலிருந்து பெஷாவருக்கு வந்து கொண்டிருந்தார். எல்லை காந்தியின் கைது செய்தியைக் கேட்டதும், ஆயிரக்கணக்கான மக்கள் அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சார்சத்தா சிறையை முற்றுகையிட்டனர். பெஷாவர் நகரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். அங்கிருந்த பஷ்தூன்கள் கிஸ்ஸா கவானி பஜாரில் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ (புரட்சி ஓங்குக) என்று முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையில், ஓர் ஆங்கிலேய அதிகாரி மோட்டார் சைக்கிளில் வேகமாக ஊர்வலத்திற்குள் புகுந்து சென்றார், இதனால் பலர் நசுங்கினர் மற்றும் நெரிசல் போன்ற சூழல் உருவானது.

கோபமடைந்த கும்பல் மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைத்தது. அந்த ஆங்கிலேய அதிகாரி தீயில் கருகி உயிரிழந்தார். அங்கு ஆயுதமேந்திய போலீஸ் இருந்தபோதிலும், நிர்வாகம் ராணுவத்தை வரவழைக்க உத்தரவிட்டது. சிறிது நேரத்தில் ராணுவத்தின் நான்கு பட்டாலியன்கள் அங்கு வந்து சேர்ந்தன, ஆயுதம் ஏந்திய வீரர்கள் நகரம் முழுவதும் பரவினர்.

By admin