• Sat. Mar 28th, 2026

24×7 Live News

Apdin News

சப்புகஸ்கந்தவில் போதைப்பொருள் தொகுதியுடன் ஒருவர் கைது

Byadmin

Mar 28, 2026


சப்புகஸ்கந்த பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போது, சுமார் 5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பெருமளவிலான போதைப்பொருள் தொகுதியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் 1 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள், 515 கிராம் ஐஸ் போதைப்பொருள், 565 கிராம் கொக்கைன்  மற்றும் பெருமளவிலான போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், இந்தப் போதைப்பொருள் தொகுதி துபாயில் தலைமறைவாக இருக்கும் இரண்டு பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களினால் இவருக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

களனி பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினர் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post சப்புகஸ்கந்தவில் போதைப்பொருள் தொகுதியுடன் ஒருவர் கைது appeared first on Vanakkam London.

By admin