இயக்குநர்களும்.. முன்னணி நட்சத்திர நடிகர்களுமான சமுத்திரக்கனி – கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘கார்மேனி செல்வம் ‘ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கார் மேனி’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ராம் சக்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார்மேனி செல்வம் ‘ எனும் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், அபிநயா, லட்சுமி பிரியா சந்திரமௌலி, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா , அர்ஜுனன், கோதண்டம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யுவராஜ் தக்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக் க்ளவுட் ஸ்டுடியோ & டெக்னாலஜி எனும் நிறுவனம் இசையமைத்துள்ளது.
வாடகை வாகனத்தை இயக்கும் சாரதியின் வாழ்வியலை மையப்படுத்தி உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாத்வே புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கிறார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற’ ‘சாந்தி நா கெளம்பணும்..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் மற்றும் றாப் இசை கலைஞரான குல்ஸ் எழுத… பின்னணி பாடகர் குல்ஸ் மற்றும் பின்னணி பாடகி ஸ்ரேயா ஸ்ரீரங்கா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். வாடகை வாகனத்தை இயக்கும் சாரதியின் எண்ணவோட்டத்தை றாப் இசையிலும்… அவருடைய குடும்ப உறுப்பினர்களின் எதிர்பார்ப்பினை கர்நாடக இசையிலும் உருவாக்கி இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
The post சமுத்திரக்கனி நடிக்கும் ‘கார்மேனி செல்வம்”படத்தின் முதல் பாடல் வெளியீடு appeared first on Vanakkam London.