0
சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு பொருத்தமான சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை (22) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவிக்கையில்,
ஆயுர்வேத பொருட்கள் மற்றும் சில சிகிச்சை முறைகள் தொடர்பாக சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவது தற்போதுள்ள சட்டத்தின் கீழ் செய்யப்படலாம் எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வகையில் , சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டம் நாட்டில் இல்லை எனவும், அத்தகைய சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.