0
Facebook, Google மற்றும் TikTok உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மீது நியூயோர்க் மாநில நிர்வாகம் வழக்குத் தொடர்ந்துள்ளது.
தம் மாநில இளைஞவர்களை அடிமைப்படுத்தி, மனநல நெருக்கடியை சமூக ஊடகங்கள் ஏற்படுத்துவதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் 327 பக்கங்களில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா முழுவதும் இதுபோன்று சுமார் 2,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இந்த முறைப்பாடுகளில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அலட்சியமாக இருந்து பொதுமக்களுக்குத் தொல்லை விளைவிக்கின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லாப நோக்கத்திற்காக அவை இளையர்களை அடிமைப்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.
நியூயோர்க் நகரில் பெரும்பாலான பதின்ம வயதினரின் திரைநேரம் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக உள்ளது. அதனால் அவர்கள் தூக்கமின்றித் தவிப்பதுடன், பாடசாலைக்கும் செல்வதில்லை எனக் கூறப்படுகிறது.
Google நிறுவனத்தின் பேச்சாளர், Youtube மீதான புகாரில் உண்மைத்தன்மை இல்லை என்றார். எனிறும், பிற நிறுவனங்கள் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.