• Wed. Aug 27th, 2025

24×7 Live News

Apdin News

சம்பூர் பகுதியில் மனித எச்சங்களை ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக பட்ஜட் மன்றில் சமர்ப்பிப்பு

Byadmin

Aug 27, 2025


சம்பூர் பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக சம்பூர் பொலிஸாரினால் இன்று செவ்வாய்க்கிழமை (26) பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்டதுடன், மாகாண மேல் நீதிமன்ற அனுமதியுடன் மேலதிக நடவடிக்கைக்காக குறித்த வழக்கானது செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

திருகோணமலை சம்பூர் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட விடயம் தொடர்பான வழக்கானது மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி. தஸ்னீம் பௌசான் முன்னிலையில் இன்றைய தினம்  விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக  சம்பூர் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் உத்திதேச பட்ஜட் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த பகுதியில் தொல்பொருள் திணைக்களத்திடம் இருக்கின்ற ஜி.பி.ஆர் என்ற ஸ்கான் இயந்திரத்தை கொண்டு குறித்த பகுதியில் மேலும் மனித எச்சங்கள் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்வதற்காக சட்ட வைத்திய அதிகாரி, தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக காணாமல் போனோர் அலுவலகத்தினால் ஒப்பமிடப்பட்டு குறித்த உத்தேச பட்ஜட் ஆனது தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்,

குறித்த பட்ஜட் ஆனது மூதூர் மாவட்ட நீதிமன்ற கட்டளையுடன் மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு மாகாண மேல் நீதிமன்றத்தின் அனுமதியுடன் மேலதிக நடவடிக்கைகள் எடுப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி குறித்த வழக்கானது தவணையிடப்பட்டுள்ளதாகவும் காணாமல் போனோர் அலுவலகத்தின் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி எம்.எம்.நஸ்லீம் தெரிவித்தார்.

சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் ஆயுபு என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த யூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் பின்னர் மிதிவெடி அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

By admin