0
அவுஸ்திரேலியாவில் சரக்குக் கப்பலில் இருந்து தவறி விழுந்த நபர் ஒருவர், 20 மணித்தியாலங்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டார் என CNN செய்தி வெளியிட்டுள்ளது.
கரையில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தூரம் கடலில் அடித்துச் செல்லப்பட்ட குறித்த நபர் உயிர்காக்கும் மேலாடையை அணிந்திருந்தார்.
அவர் தண்ணீரில் மிதந்தவாறு, கைகளை அங்கும் இங்கும் அசைத்து உதவி கோரியுள்ளார். அப்போது மீன்பிடிக்க வந்த ஒருவர் தண்ணீரில் குறித்த நபரைக் கவனித்துள்ளார். உடனடியாக செயற்பட்டவர், கடலில் மிதந்தவரை தன்னுடைய படகுக்குள் இழுத்தெடுத்துள்ளார்.
மீட்கப்பட்டவர் மிகவும் சோர்வாக இருந்தார் என்றும் அவரின் உடல் மிகவும் குளிர்ச்சியாக இருந்ததாகவும் மீனவர் தெரிவித்தார்.
மேலும், வைத்திய உதவியாளர்கள் வரும்வரை அவர் சுயநினைவுடன் இருந்தார் என்றும் மிகவும் தெளிவாகவும் பேசினார் என்றும் மீனவர் தெரிவித்தார்.
அதேவேளை, கப்பலில் இருந்து தவறி விழுந்த மேற்படி நபர் மீட்க 2 படகுகள் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டதாக CNN தெரிவித்தது.