• Tue. Oct 15th, 2024

24×7 Live News

Apdin News

சரத்குமார் – சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் ‘கொம்பு சீவி’

Byadmin

Oct 15, 2024


‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமாரும், ‘இளைய கேப்டன்’ சண்முக பாண்டியனும் கதையின் நாயகர்களாக முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘கொம்பு சீவி’ என பெயரிடப்பட்டு, அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

நட்சத்திர இயக்குநர் பொன். ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கொம்பு சீவி’ எனும் திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் , காளி வெங்கட், தாமிகா, ‘கல்கி’ ராஜா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தமிழகத்தின் தென் பகுதியான மதுரைக்கு அருகில் உள்ள உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் 1996 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ் த. செல்லையா தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் சரத்குமார் , சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுவதும், பின்னணியில் காவல் நிலையமும், காவலர்களும் இருப்பதும் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது.

By admin