• Thu. Jan 8th, 2026

24×7 Live News

Apdin News

சரப்ஜித் கவுர்: பாகிஸ்தான் சென்று முஸ்லிமாக மாறி ஒருவரை மணம் புரிந்த இந்திய பெண்ணுக்கு என்ன சிக்கல்?

Byadmin

Jan 7, 2026


சரப்ஜித் கவுர், இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், Ali Imran Chattha

படக்குறிப்பு, சரப்ஜித் கவுர் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டார்.

பாகிஸ்தான் குடிமகன் ஒருவரை திருமணம் செய்துகொண்ட சரப்ஜித் கவுரின் பயண ஆவணங்களில் உள்ள சில குறைபாடுகளால் அவர் இன்னும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை.

பாகிஸ்தானின் பஞ்சாப் சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சர் சர்தார் ரமேஷ் சிங் அரோரா பிபிசியிடம் கூறுகையில், ஜனவரி ஐந்தாம் தேதி சரப்ஜித் கவுர் வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், ஆனால் அவருடைய பயண ஆவணங்களில் ஏற்பட்ட சில சிக்கல்களால் அவர் இந்தியாவுக்கு அனுப்பப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

“சரப்ஜித் கவுரை மீண்டும் இந்தியா அனுப்புவதற்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் இன்னும் தடையில்லா சான்றிதழை வழங்காததால், அவருடைய விசா காலாவதியானபிறகும் கூட அவர் அங்கேயே இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. எனவே, அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி அவரால் சட்டபூர்வமாக நாட்டைவிட்டு வெளியேற முடியாது,” என்றார் அவர்.

இதனிடையே, சரப்ஜித் கவுர் கடந்த திங்கட்கிழமை வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்டதாக அங்குள்ள வட்டாரங்கள் பிபிசி செய்தியாளர் ஷுமைலா கானுக்கு தகவல் தெரிவித்தன. கவுரின் விசா காலாவதியாகிவிட்டதால், அவரை பாகிஸ்தானைவிட்டு வெளியே அனுப்ப அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் அனுமதி வேண்டும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திடமிருந்து தடையில்லா சான்றிதழ் கிடைக்காததால், வாகா எல்லையிலிருந்து அவர் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார்.

By admin