0
பனங்கிழங்கின் கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் கிளைசெமிக் லோடு குறைவாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இதை தைரியமாக உணவுக்கு சேர்க்க முடியும். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மந்தப்படுத்தி, உணவு உட்கொண்டவுடன் ஏற்படும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் தவிர்க்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பல நுண்ணிய ஊட்டச்சத்துக்கள், இன்சுலின் அளவை அதிகரித்து ரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது.
மேலும், மெக்னீசியம், நீரிழிவு நோயின் ரெட்டினோபதி மற்றும் நரம்பு பாதிப்புகளை தடுக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, இன்சுலின் உணர்திறனைக் கூட்டி, இன்சுலின் சரியாக செயல்பட உதவுகிறது, இதில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை சீர்படுத்தும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும், இதனுடைய கால்சியம் எலும்புகளையும் தசைகளையும் பலப்படுத்தி, முதுமை மூட்டறி மற்றும் எலும்புப்புரியை குறைக்க உதவுகிறது. பனங்கிழங்கில் உள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நல்ல கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தி, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
மேலும் பனங்கிழங்கில் உள்ள அதிகமான நார்ச்சத்து, குடல் இயக்கத்தை சீர்படுத்தி, செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது. எனவே பல நன்மைகள் கொண்ட பனங்கிழங்கை சர்க்கரை நோயாளிகள் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் உட்கொள்ளலாம்.