பொதுவாக சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என்று கூறப்பட்டு வந்தாலும், ஒரு சில வாழைப்பழங்களை மட்டுமே சாப்பிடக்கூடாது என்றும் சில வாழைப்பழ வகைகளை சாப்பிடலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
சர்க்கரை நோயாளிகள் மா, பலா, வாழை ஆகிய பழங்களை சாப்பிடக்கூடாது என்று கூறப்பட்டுள்ள நிலையில், குளுக்கோஸ் அதிகம் உள்ள பூவன் பழம், ரஸ்தாளி ஆகிய பழங்களை மட்டுமே சர்க்கரை வியாதிகள் தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில், அதிக நார்ச்சத்து உள்ள பச்சை வாழைப்பழம், செவ்வாழை, நேந்திரம் பழம் போன்றவற்றை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என்றும் கூறப்படுகிறது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், அதனை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
அதை போல், மலச்சிக்கலுக்காக தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது தவறல்ல. ஆனால் சிறிய அளவான பழுத்த வாழைப்பழத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது.
வாழைப்பழத்தில் உள்ள பெக்டின், குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் உடலில் உறிஞ்சப்படுவதை தடுக்கும் ஆற்றல் உள்ளது என்றும், எனவே வாழைப்பழத்தை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
The post சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது? appeared first on Vanakkam London.